» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோடைகாலத்தில் வீணாகும் தண்ணீர்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வியாழன் 1, ஜூன் 2023 10:50:20 AM (IST)
திருநெல்வேலியில் கோடைகாலத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பேட்டை காமராஜ் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமராஜர் நினைவு மேல்நிலை நீர் நிலை தொட்டியில் இருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் மேலே இருந்து சிந்தி வீணாகிறது. கோடை காலங்களில் அணைக்கட்டுகளில் தண்ணீர் குறைவாக உள்ள நேரத்தில் இவ்வாறு தண்ணீர் வீணாக்குவது மிகவும் வேதனைக்கு உள்ளாகிறது.
அங்கு இருப்பவரிடம் கேட்டதற்கு கடந்த ஒரு மாத காலமாக இவ்வாறு தண்ணீர் வீணாக செல்கிறது என்று கூறினார். மேலும் இனி வருங்காலங்களில் தண்ணீர் வீணாகுவதை தடுக்க குழாயை சரி செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் & நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
