» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் இருந்து கடைசி பேருந்தை இரவு 10 மணிக்கு இயக்க கோரிக்கை!
வியாழன் 1, ஜூன் 2023 3:09:25 PM (IST)
திருநெல்வேலியில் இருந்து உடன்குடிக்கு நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக இரவுநேர கடைசி பேருந்தினை தினசரி 10 மணிக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாெடர்பாக நாசரேத்தைச் சேர்ந்த தங்கநகை தொழில் செய்து வரும் மகாராஜன் என்பவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி, வண்ணார் பேட்டைப் புறவழிசாலை பணிமனை மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "திருநெல்வேலி புறவழி சாவை பனிமனையில் இருந்து தடம் எண் 137பி பேருந்து இரவு 10 மணிக்கு திருநெல்வேலி முதல் உடன்குடி நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து வாரத்தில் சில நாள் இரவு இயக்காமல் வேறு ஊர்களுக்கு மதுரை திருப்பூர் அனுப்பபடுகிறது. அதனால் இந்த பேருந்தை நம்பிநிற்கும் வியாபாரிகள், கூலிதொழிலாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்ஸ்கள், திருநெல்வேலி கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நோயாளிகள் இந்த பேருந்து வரவில்லை என்றால் அனைவரும் விடியற்காலை வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டும்.
இரவு நாசரேத், மெஞ்ஞானபுரம், உடன்குடி வழிதடத்தில் இரவு 8.30க்கு பிறகு இந்த 10 மணி பேருந்துதான் உள்ளது. அனைவரும் பயன்படும் வகையில் இரவு நேரம் கடைசி பேருந் தினை தினசரி 10 மணிக்கு இயக்க வேண்டும். மேலும் இரவு 9.30 மணிக்கு நாசரேத் வழியாக திசையன்விளை சென்ற பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
Vn SaranJun 3, 2023 - 09:02:18 AM | Posted IP 172.7*****
நானும் இந்த பேருந்தை நம்பு ஏமாந்தவன் தான்.
Haris PremJun 2, 2023 - 05:17:06 PM | Posted IP 172.7*****
தயவு செய்து பரிசீலிக்க வேண்டுகிறோம். இது குரலற்ற அனேகரின் குரலாக ஒலிக்கிறது. பேருந்து இயக்கப்பட்டால் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல அநேகருக்கு பயனுள்ளதாக அமையும். தொடர்ந்து இயக்கப்படும் பட்சத்தில் நம்பிக்கையோடு பயணிகள் கூட்டமும் அதிகரிக்கும்.
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

SureshJun 7, 2023 - 07:41:18 AM | Posted IP 172.7*****