» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம்!!
வெள்ளி 2, ஜூன் 2023 12:27:07 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: 25 ஆண்டுகள் போராடி, 15 உயிர்களை தியாகம் செய்து நாசகார ஸ்டெர்லைட்டை மூடியுள்ளோம்! அந்நிய நாட்டு வேதாந்தா - ஸ்டெர்லைட் எதிர்ப்பு எம் இரத்தத்தில் உள்ளது! காவல்துறை அதிகாரியாக இருந்து, பாஜக தலைவராக நேற்று வந்த அண்ணாமலைக்குத் தெரியாது தூத்துக்குடி மக்களின் போராட்ட வரலாறு. முதலில் அர்ஜீன் சம்பத், பின்பு ஆளுநர் ஆர்.என்.ரவி, அடுத்து அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு வேதாந்தா மீதென்ன அக்கறை?
ஏற்கனவே வேதாந்தாவிடம் பெற்ற நிதிக்கு வேலை செய்கிறீர்களா? இல்லை கூடுதலாக வாங்கப் பேசுகிறீர்களா? கர்நாடகாவிற்குச் சென்று பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்! இப்போது ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாகப் பேசி நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூடுவீர்கள் என நம்புகிறோம்! கார்ப்பரேட் கைக்கூலி வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையேல், தூத்துக்குடி மக்கள் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் உரிய பாடம் புகட்டுவோம்! - இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
TAMILARKALJun 2, 2023 - 04:00:25 PM | Posted IP 172.7*****
அண்ணாமலை படித்தவர் பண்பானவர், அவர் கூறிய கருத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்...ஒரு கிராமமக்களே sterlite ஐ திறக்க வலியுறுத்துகிறார்கள் . அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து தமிழகஅரசு முடிவெடுக்கட்டும்.....
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

malaiJun 2, 2023 - 07:01:15 PM | Posted IP 172.7*****