» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல நிரந்தர தடை: முதல்வருக்கு கோரிக்கை!

வெள்ளி 2, ஜூன் 2023 12:55:02 PM (IST)

தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று  முன்னாள் எம்எல்ஏ  கே.ரவி அருணன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் "தமிழகத்திலிருந்து பிற மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதித்து இருக்கிறது அதைப்போலவே தற்போது மணலுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் எம் சாண்ட், ஜல்லி கற்கள் சரல் செம்மண் ஆகியவற்றை கொண்டு செல்ல தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

கேரளா அல்லது கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் தங்கள் மாநிலத்தின் நலனை குறிப்பாக இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தான் அக்கறை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படாமல் தன் மாநிலத்தை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தி வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது ஒன்றும் தவறான போக்கு என்று சொல்லிவிட முடியாது.

அந்த வகையில் கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் சரி கர்நாடகத்தில் மேகதூது அணை விவகாரத்திலும் சரி அவர்களது செயல்பாடுகள் முழுக்க முழுக்க அந்தந்த மாநிலத்தின் நலனையே கருத்தில் கொண்டு இருக்கிறது. இதே போல் நம் தமிழகமும் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை அதிலும் குறிப்பாக நமது நாட்டின் சொத்தான கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

தண்ணீர் கூட அதிக அளவு மழை பெய்தால் மற்றும் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கை நமக்கு அளித்த நன்கொடையான கனிம வளங்கள் அப்படி அல்ல. இதை தண்ணீரைப் போல ஆண்டுக்காண்டு இயற்கை நமக்கு அளிக்காது. பல ஆண்டுகாலம் இயற்கை இதை உள்வாங்கிக் கொண்டு நமக்கு அளித்தது. ஆகவே அதை நமது மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்கக் கூடாது இதைத்தான் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் சரி மேகதாது அணை விவகாரத்திலும் சரி மற்ற மாநிலங்கள் சுயநலத்துடன் செயல்படுவதாக கூப்பாடு போடும் நமக்கு நமது மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதில் குறியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. ஆகவே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory