» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும்பணி ஜூன் 11ம் தேதி துவக்கம்!
வெள்ளி 2, ஜூன் 2023 5:06:18 PM (IST)
தூத்துக்குடி பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும்பணியை வருகிற 11ஆம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி துவக்கி வைக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு 15வது தங்க தேரோட்டம் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மறைமாவட்டம் துவங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தாண்டு திருவிழாவில் பனிமய அன்னையின் தங்க தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி தங்க தேரோட்டத்திற்கான அனைத்து பணிகளும் ஆலய வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் தங்க தேர் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா வரும் ஜூலை 26ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகரில் இருந்து தூத்துக்குடிக்கு செயின்ட் ஹெலேனா என்ற கப்பலில் கடந்த 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பனிமய மாதா சொரூபம் வந்தடைந்த நாளை தூத்துக்குடி மறைமாவட்ட மக்கள் புனித நாளாக கடைபிடித்து அன்றைய தினம் சுபநிகழ்ச்சிகளை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் 16வது தங்க தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 9ம் தேதியன்று தங்க முலாம் பூசுவதற்காக மாதா சொரூபம் உரிய திருப்பலி, வழிபாடுகளுக்கு பின்னர் பீடத்தில் இருந்து இறக்கப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக இரு நாட்கள் வைக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி வருகை தந்து, முலாம் பூசும் பணிகளை துவக்கி வைக்கிறார்.
இதையடுத்து மாதா சொரூபம் பல்லக்கில் ஏற்றி அருகில் உள்ள தஸ்நேவிஸ் மாதா துவக்கப் பள்ளியில் உள்ள தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அன்னைக்கு தங்க முலாம் பூசப்படுகிறது. இந்த அறைக்குள் முலாம் பூசும் பணியாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பணிகள். 10 முதல் 15 நாட்கள் வரையில் நடக்கும். அதன் பின்னர் பனிமய அன்னையின் சொரூபம் மீண்டும் ஆலயத்தில் அவருக்குரிய சிம்மாசனத்தில் அமர்த்தப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

AzhaguvelJun 4, 2023 - 12:24:10 PM | Posted IP 172.7*****