» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாட்டுக்கோழி வளர்க்க மானியம் : ஆட்சியர் தகவல்

சனி 3, ஜூன் 2023 4:04:53 PM (IST)

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு ) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்வுசெய்யப்படவேண்டியபயனாளிகளின் தகுதிகள்

1. ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

2. கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.

3. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு ( தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ( கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ( ரூ.1,50,625/-) மாநில அரசால் வழங்கப்படும்.

4. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

5. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்..

6. பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/ அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும்.

7. பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

8. விதவைகள், ஆதரவற்றோர் , திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

9. தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 % தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

10. 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது.

11. தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும்.

12. தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி ஃ கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதி அளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி திறன்களின் சான்றுகள் அளிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory