» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஞாயிறு 4, ஜூன் 2023 12:06:25 PM (IST)
குரும்பூர் அருகே காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள கானம் கிராமம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வன்னியராஜ் மகன் பொன் ராதாகிருஷ்ணன் (24), இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது பெற்றோரிடம் கூறினாராம்.
அதற்கு அவரது பெற்றோர்கள் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து தருகிறோம் என்று கூறினராம். இதனால் மனவேதனை அடைந்த பொன் ராதாகிருஷ்ணன் நேற்று தனது வீட்டில் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

saavuJun 4, 2023 - 08:35:01 PM | Posted IP 162.1*****