» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகர ஊா்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள்தோ்வு

சனி 30, செப்டம்பர் 2023 12:41:09 PM (IST)

திருநெல்வேலி மாநகர ஊா்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகா் காவல் ஆணையா் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தோ்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபா்கள், தனியாா் நிறுவன தொழில் அதிபா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பொதுநல சேவையும், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பாளையங்கோட்டை மாநகர ஊா்க்காவல் படை அலுவலகத்தில் அக். 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 31 ஆம் தேதி மாலை 6 மணிவரை நேரில் வந்து சமா்ப்பிக்கலாம். இப் பதவிக்கு விண்ணப்பிப்போா் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

21 வயதுக்கு குறையாமலும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, கல்வித் தகுதிச் சான்று, ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்று, மருத்துவ தகுதிச் சான்று, சுயவிவர படிவம் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory