» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகராட்சியில் நிலவும் குழப்பம்: மக்கள் பணிகள் முடங்கும் அபாயம்!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:49:53 PM (IST)

நெல்லை மாநகராட்சியில் நிலவும் குழப்பத்தால் மக்கள் பணிகள் முடங்கும் அபாயம் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாநகராட்சியில் இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 55 கவுன்சிலர்களில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் இருந்தும் திமுக வேட்பாளர் இராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் - 30. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் - போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் பெற்ற வாக்குகள் - 23. இவர் எம்எல்ஏ அப்துல் வகாப் ஆதரவாளர் என கூறப்படுகிறது. 

பெரும்பாலான கவுன்சிலர்கள் அப்துல்வகாப் மாவட்ட செயலாளராக இருந்த போது கவுன்சிலர் சீட் பெற்று வென்ற அவரது ஆதரவாளர்கள். செல்லாத வாக்கு - அதிமுக உறுப்பினர் ஜெகன்நாதன் வரவில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்த போதும் கட்சி வேட்பாளருக்கு எதிராக 20 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். 

"51 கவுன்சிலர்களை கட்டுபடுத்தி கட்சி பலத்தை நிருபிக்க கையாலாகாத திமுக தலைமை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுபடுத்தி ஆட்சி செய்ய நினைப்பது காமெடியாக உள்ளது. ஏற்கெனவே திமுக மேயருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மக்கள் பணிகள் முடங்கிய நிலையில், திமுக உட்கட்சி பிரச்சனையில் மீண்டும் செயல்படாத மாநகராட்சியாகவே இருந்து விடுமோ என்று அச்சம் தான் நெல்லை மாநகர் மக்களுக்கு மிச்சம்" என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory