» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
புதன் 7, ஆகஸ்ட் 2024 10:42:16 AM (IST)
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்கிறாா்கள். விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.
மேற்கு ெதாடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அருவிகளில் நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்து தண்ணீர் சீராக விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதை அறிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மற்ற அருவிகளிலும் உற்சாகத்துடன் குளித்தனர்.