» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சபாநாயகர் மீதான அவதூறு வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி ஆவணங்களை தாக்கல் உத்தரவு

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 12:40:15 PM (IST)

சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கில் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய அ.தி.மு.க. நிர்வாகிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அ.தி.மு.க.வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாக கூறி அவர் மீது அ.தி.மு.க. வக்கீல் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப ஏதுவாக போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory