» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்மன் சிலை கண்களில் ஓளி வீசிய அதிசயம்: பக்தர்கள் பக்தி பரவசம்!

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 3:32:09 PM (IST)



திசையன்விளை அன்னை மூகாம்பிகை ஆலயத்தில் அம்மன் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அன்னை மூகாம்பிகை ஆலயம் தனியாக உள்ளது. நேற்று மாலையில் 6.40 மணிக்கு கோவில் பூசாரி முகேஷ் பட்டர் மூகாம்பிகைக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டு பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார். 

அங்கு தனது மருமகளின் பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று வேண்டி அதே பகுதியை சேர்ந்த முத்து ஆச்சாரி தனது மனைவியுடன் அங்கு வந்திருந்தார். அப்போது மூகாம்பிகை கல்சிலையில் அம்மன் கண்களில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை அவரது மனைவி பார்த்துள்ளார். இதை அருகில் இருந்த தனது கணவரிடம் கூறினார். அவரும் அதை பார்த்து வியந்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார்.

உடனே அங்கிருந்த பக்தர்களும் திரண்டு வந்து பார்த்து வியந்தனர். இதனை ஏராளமானோர் புகைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சுமார் 1 மணி நேரத்தில் காட்டுத்தீ போன்று தகவல் பரவி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வரிசையாக பார்த்து செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.

இந்த அதிசயத்தை காண இரவு 10.30 மணி அளவிலும் கடுமையான கூட்டம் அலைமோதியது. வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பழம், லட்டு பிரசாதமாக தங்கையா கணேசன் வழங்கினார். அதன்பின்னர் கோவில் நடையை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதனால் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

அதன்பின்பும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அம்மனை காணவந்தனர். ஆனால் கோவில் நடை அடைக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது அம்மனின் கண்கள் வழக்கம் போல் இயல்பாகவே காட்சியளித்தது. அங்கு அம்மனுக்கு ஏற்றி வைத்திருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory