» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்ததால் விபரீதம்: 15 மாணவிகள் திடீர் மயக்கம்!

சனி 10, ஆகஸ்ட் 2024 11:10:41 AM (IST)

செங்கோட்டை அரசு பள்ளி வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததால் 15 மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்திருந்த ரசாயன பாட்டில் (வாசனை திரவியம்) எதிர்பாராதவிதமாக தவறி தரையில் விழுந்து உடைந்தது.

இதனால் அந்த வகுப்பறை முழுவதும் பயங்கர நெடியுடன் கூடிய வாசனை பரவியது. இதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து வகுப்பு ஆசிரியை, தலைைம ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கிய 2 மாணவிகளையும் செங்கோட்ைட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அதே வகுப்பறையில் மற்ற மாணவிகள் மீண்டும் அமர்ந்து படிக்க தொடங்கினர். ரசாயனத்தின் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்ததால் சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து, மயங்கிய மாணவிகளை சிகிச்சைக்காக செங்்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக 7 மாணவிகளை தென்காசி அரசு மருத்துவமனைக்கும், 2 மாணவிகளை தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பிறகு 7 மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 மாணவிகளுக்கும், தென்காசி அரசு மருத்துவமனையில் 2 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வகுப்பறையில் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், பெற்றோர்கள் பதற்றத்துடனும் கண்ணீருடனும் மருத்துவமனைகளுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மருத்துவமனைகளுக்கு ெசன்று சிகிச்சை பெறும் மாணவிகளை பார்வையிட்டு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், வகுப்பறையில் ரசாயன பாட்டில் தவறி விழுந்து உடைந்ததும், அதனை தண்ணீரால் கழுவி விடாமல் தொடர்ந்து அங்கேயே மாணவிகளை அமர வைத்து படிக்க வைத்ததால்தான் அடுத்தடுத்து மயங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவிகள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்தனர். அந்த வகுப்பு மாணவிகளை வேறு அறையில் அமர வைத்து பாடம் நடத்தினர். செங்கோட்டை அரசு பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்து விழுந்து 15 மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory