» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேலதிருவேங்கடநாதபுரத்தில் சமுதாயக்கூடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 5:20:17 PM (IST)
மேலதிருவேங்கடநாதபுரத்தில் ரூ.86 இலட்சம் மதிப்பிலான சமுதாயக்கூட கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (14.08.2024) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் மேலத்திருவேங்கட நாதபுரத்தில் ரூ.86 இலட்சம் மதிப்பிலான சமுதாயக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், சமுதாய நலக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்.
மேலதிருவேங்கடநாதபுரம் சமுதாயநலக்கூடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 360.38 சதுரமீட்டர் (தரைத்தளம் 180.19 சதுர மீட்டர் முதல் தளம் 180.19 சதுர மீட்டர் ) பரப்பளவில் ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப ஒப்புதலுடன் சமுதாயநலக்கூடம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சமுதாயக்கூட கட்டடத்தின் தரைத்தளத்தில் வரவேற்பறை, உணவுக்கூடம், சமையல் தயாரிக்க சுகாதாரமான வகையில் சமையல் அறையும், பொருள் வைப்பு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் தளத்தில் திருமணக்கூடம், திருமண மேடை, மணமகன் அறை மற்றும் மணமகள் அறையுடன் குறியல் மற்றும் கழிவறை வசதி மற்றும் தரைத்தளத்தில் தனியாக நவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்ட குளியல் மற்றும் கழிவறை கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் உயர்ந்த வண்ணப்பூச்சுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிருவேங்கட நாதபுரம் ஆதிதிராவிடர் மக்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுபகாரிய நிகழ்ச்சிகளை தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள சமுதாயநலக்கூடத்தில் சிரமங்கள் ஏதுவுமின்றி சந்தோசமாக ஆதிதிராவிடர் மக்கள் நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு நவீன சமுதாயக்கூடம் மேலதிருவேங்கடநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ளது மிகவும் பயனுடையதாக உள்ளது.
தொடர்ந்து, திருவேங்கட நாதபுரத்தில் ரூ.1.26 கோடியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், ரூ.10 இலட்சம் மதிப்பில் 35X35 மீட்டர் பரப்பளவில் புதிதாக குளம் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தாட்கோ மேலாளர் பாஸ்கரன், பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நெல்லையப்பன், தாட்கோ பொறியாளர் பால்ராஜ், திருவேங்கடநாதபுரம் ஊராட்சி துணைத்தலைவர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.