» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பதவி ஏற்பு
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 10:10:38 AM (IST)
தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப் பாளராக வி.ஆர். சீனிவாசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். சீனிவாசன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராக வும், திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர காவல் துறை நிர்வாகம் மற்றும் அண்ணாநகர் துணை ஆணையராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்கள் மற்றும் ரௌடிகளின் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்படும். போதை பொருட்களின் நடமாட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் உடனுக்குடன் எடுக்கப்படும்.
பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். தகவல்கள் ஏதாவது இருப்பின் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கட்டுபாட்டு அலுவலகத் திற்கு 9884042100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் வி ஆர் சீனிவாசன் தெரிவித்தார்.