» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் அல் மஜீத் அறக்கட்டளை சார்பில் 78 ஆவது சுதந்திர தினவிழா!
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 11:38:35 AM (IST)
சங்கரன்கோவிலில் அல் மஜீத் அறக்கட்டளை சார்பில் 78 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில் கழுகுமலை ரோடு காயிதே மில்லத் ஆட்டோ நிறுத்தம் அல் மஜித் அறக்கட்டளை சார்பாக நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செயலாளர் ஹசன் இப்ராஹிம் மூவண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில், நிகழ்வில் அல் மஜீத் அறக்கட்டளை துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா, துணைச் செயலாளர் சங்கை சேக், மருத்துவ சேவை பிரிவு மைதீன் மற்றும் முன்னாள் தலைவர் தக்கரை பீரப்பா, முன்னாள் செயலாளர் ராஜா குட்டி, சித்திக், ஆர்கே ரியாஸ், அப்துல் ரகுமான், மற்றும் ரஹ்மத்துல்லா, ஆட்டோ சங்க நிர்வாகி ஹக்கீம், அலி, ராஜமாணிக்கம், தன்னார்வலர் பீர் மைதீன், பாபாஜி, சதாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.