» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து 500 கி.மீ சைக்கிள் பயணம்!
சனி 17, ஆகஸ்ட் 2024 4:41:09 PM (IST)
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து 500 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிரியருக்கு சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் இன்னட்டேரா மில்க் கம்பெனியின் உதவி மேலாளர் மற்றும் சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் திரி சாரணர் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெபா என்பவர் தன்னார்வ நோக்கத்தில் 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்கள், சாரண/சாரணியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தருமபுரி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் வழியில் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை புரிந்தார்.
அவரை சாரண /சாரணியர்கள் வரவேற்றனர். தனக்குத் தானே தன்னுடைய தேவைகளை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் முதல் உதவியின் அவசியம் குறித்தும் உடல் நலம், மனநலத்தை பற்றி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா. பிரபாவதி அவர்கள் தலைமை தாங்கி சைக்கிள் பயணத்தை கொடியசைத்து மீண்டும் துவக்கி வைத்தார். மற்றும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் சத்யா மகேஸ்வரி சண்முகஜெகம் அனிதா திருமலைகுமார் ராமையா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை பள்ளி சாரண ஆசிரியர் சி. நடராஜன் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.