» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டப்புளியில் ரூ.48.50 கோடியில் தூண்டில் வளைவு மீன் இறங்குதளம் பணிகள் துவக்கம்!

சனி 31, ஆகஸ்ட் 2024 12:10:13 PM (IST)



கூட்டப்புளியில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகளை சபாநாயகர் அப்பாவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூட்டப்புளியில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு. அப்பாவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ். ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெணெய் வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள்.

இராதாபுரம் வட்டம், கூட்டப்புளியில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தூண்டில் வளைவு அமைப்பதின் மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாக தடுக்கப்படும். படகுகளை இயக்குவது மிகவும் சுலபமாகும் மற்றும் விபத்துகள் முற்றிலுமாக தவிர்கப்படும். கிராமங்களில் மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை அதிகரிக்கவும், அதிகப்படியான படகுகள் நிறுத்தவும் மற்றும் பாதுகாப்பாக நிறுத்தவும் வழிவகை செய்யப்படும். மீன் பிடிகளை சுகாதாரமான முறையில் கையாளும் வகையிலும், 955மீ தெற்கு தூண்டில் வளைவு, 395மீ வடக்கு தூண்டில் வளைவு, மீன் ஏழக்கூடம்(20 மீ x10 மீ) அமைக்கப்படவுள்ளது.

மேலும், மீனவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மீனவ பகுதிகளில் சர்வதேச அளவில் ஒரு விளையாட்டு அரங்கம் கொண்டுவர உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், மீனவ கிராமத்தின் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, நமது மீனவ கிராமப்பகுதிக்கு சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் வர உள்ளது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலன் காக்கும் வகையில் தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம், மீன் விதைப் பண்ணைகள், மீன் வளர்ப்பு தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மீனவர்கள் மீன்பிடித் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, மீனவ மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித்தல் மற்றும் அது சார்ந்த தொழிலாக இருக்கிறது. மேலும் பருவகால மாறுபாடு காரணமாக கடலரிப்பு ஏற்படுவதால், அதனை தடுக்கும் வகையில் இராதாபுரம் வட்டம், கூட்டப்புளியில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு சீரிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் மீனவ மக்கள் ஒத்துழைப்பு நல்கி, என்னென்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஆல்பின் லியோன், மீன்பிடி துறைமுகம் திட்ட கோட்டம் செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், கவுன்சிலர்கள் அஜந்தா, அனிதா, முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, எரிக் சூடு இன், மல்லி, மீனவ மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory