» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு!

திங்கள் 2, செப்டம்பர் 2024 8:14:54 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் தலைமையில் இன்று (02.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஊரக வீடுகள் வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II, சாலைகள் மற்றும் பாலங்கள், ஜல் ஜீவன் இயக்கம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்,அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒட்டு மொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறுநிதி, 15-வது மத்திய நிதிக்குழு, ஊராட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பாளையங்கோட்டை வட்டம், நொச்சிக்குளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், மழைவெள்ளத்தால் சேதடைந்த வீட்டினை புதுப்பித்து புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்னையும் பார்வையிட்டு, கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட், எம்.சாண்டு தரமானதாக உள்ளதா என்பது குறித்தும், பணியின் தரம் குறித்தும், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் கட்டப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 988 வகையான பல்வேறு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வரும் தொகுப்பு மர பண்ணையினை பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தினை பார்வையிட்டார்கள்.

தொடர்ந்து, நொச்சிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பைகள் கொண்டு செல்வதற்கான பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை பார்வையிட்டதோடு, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அவற்றில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி புதிய பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து ஊராட்சிக்கு இலாபம் ஈட்டலாம். மக்கும் பொருட்களால் உரம் தயாரித்து ஊராட்சியின் மூலம் விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

மானூர் வட்டம், கங்கைகொண்டான் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வீடுகள் கட்டுமான பணியினையும், ரூ.39.68 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், சித்தார்சத்திரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் பார்வையிட்டார்கள். ஆய்வின்போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் உடனிருந்தார்கள்

இந்த கள ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அனிதா, நொச்சிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள், கூடுதல் இயக்குநர் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்) குமார், பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அம்பிகா ஜெயின், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் அப்துல் ராசிக், ராஜஸ்ரீ, குமார், சுமதி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory