» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணியில் சாக்கடை கலப்பு; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் போராட்டம்!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:22:52 AM (IST)



தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி கூட்டத்தில் பதாகையை கையில் ஏந்தி கவுன்சிலர் போராட்டம் நடத்தினார். 

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். தி.மு.க., கவுன்சிலராக வெற்றி பெற்ற பவுல்ராஜ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். விளக்க கடிதம் அனுப்பியும் அவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படாததால், தாம் முற்றிலும் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார். 

தற்போது சுயேச்சை கவுன்சிலரான பவுல்ராஜ், நேற்று தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் குடத்துடன் நடைபயணமாக மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றார். 'தாமிரபரணியில் பல இடங்களில் கழிவு நீர் சேர்வது குறித்து நீதிமன்றமே குற்றம்சாட்டிய பிறகும் இன்னும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது' என பதாகையை கையில் ஏந்தியிருந்தார்.

மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ''தற்போது, மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப்பணிகள் நடக்கின்றன. ''அவை முழுமையாக முடிந்து, பயன்பாட்டுக்கு வரும்போது சாக்கடை நீர் ஆற்றில் கலக்க வாய்ப்பில்லை. தற்போதும் நேரடியாக கலக்காமல் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி உள்ளோம்,'' என்று விளக்கம் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory