» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் விபத்தில் காயம் அடைந்த சிறப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
புதன் 4, டிசம்பர் 2024 5:14:14 PM (IST)
திருநெல்வேலி பைக் விபத்தில் காயம் அடைந்த சிறப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து (தற்போது உதவி ஆய்வாளர் பயிற்சியில் உள்ளார் இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நாகர்கோயில் நான்கு வழி சாலையில் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன் சென்ற ஆட்டோவுடன் மோதி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதியாக அந்தப் பகுதி உள்ளதால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.