» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ரூ.10லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் : அண்ணன், தங்கை கைது
வியாழன் 5, டிசம்பர் 2024 10:59:31 AM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அண்ணன், தங்கையை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் போலீசார் நேற்று திரேஸ்புரம் பண்டுகரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் மைக்கேல்ராஜ் (30) மற்றும் அவரது சகோதரியான தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசிவா மனைவி ஜெபா (25) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.10லட்சம் என்று கூறப்படுகிறத. இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Evano oruvanDec 6, 2024 - 04:24:30 PM | Posted IP 172.7*****