» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேரள அரசின் லாட்டரி குலுக்கலில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு..!!

வெள்ளி 6, டிசம்பர் 2024 11:21:05 AM (IST)

கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் பால் பண்ணை ஊழியருக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526) விழுந்தது தெரியவந்தது. முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 41) வாங்கியுள்ளார். இவருக்கு வரிகள் பிடித்தம் போக ரூ.6.12 கோடி கிடைக்க உள்ளது.

லாட்டரியில் முதல் பரிசு வென்றுள்ள தினேஷ்குமார், நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவராம். இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 டிக்கெட்டுகளை வாங்குவேன்.அப்படித்தான் இந்த முறையும் 10 டிக்கெட்டுகள் வாங்கியதில் ஒரு டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது பால் பண்ணையில் ஊழியராக பணி செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு அடிப்பது இதுவே முதல் முறையாகும்" என்றார்.


மக்கள் கருத்து

இவன்Dec 6, 2024 - 11:45:48 AM | Posted IP 162.1*****

உழைக்காமல் கிடைத்த பணம் உடம்புக்கு ஒத்துக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory