» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காலி மனைகளில் மழை நீரை அகற்றாவிட்டால் அபராதம் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!

வெள்ளி 6, டிசம்பர் 2024 4:58:59 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அமைந்துள்ள காலி மனைகளில் முறையாக அதன் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காரணத்தினால் முட்புதர்கள் உருவாகி விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறி வருவதோடு தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் போது மேற்படி பகுதியில் மழை நீர் தேக்கமாகி பொது சுகாதாரத்திற்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக மேற்படி காலி மனைகளில் வளர்ந்துள்ள கோரை புற்களில் இருந்து வெளியாகும் பஞ்சானது பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட காரணமாக அமைந்து வருகிறது. எனவே மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள மிகவும் தாழ்வான பகுதிகளில் காணப்படும் 400 காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு மேற்படி மழை நீரை உடனடியாக அகற்றுமாறும் தங்களது சொந்த பொறுப்பில் முறையாக பராமரித்திடுமாறும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்படி காலி மனைகள் அதன் உரிமையாளர்களால் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து இடத்தினை தூய்மைப்படுத்தி அதற்கான செலவின தொகையினை தொடர்புடைய உரிமையாளர்களிடமிருந்து வசூலிப்பதோடு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அபராதமும் விதித்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரினை தொடர்புடைய உரிமையாளர்கள் முற்றிலுமாக அகற்றி மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி அபராதம் மற்றும் இதர நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு ஆணையர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Mutta paiyanDec 10, 2024 - 03:22:00 PM | Posted IP 172.7*****

Gh back side government ku sonthamana idathulla amazon kadavida mosama irukku anga muthalla clean pannuga athuku piragu pvt landla pulla pudungunga

Sankaranarayanan sorimuthuDec 8, 2024 - 05:50:21 PM | Posted IP 172.7*****

நல்ல தகவல் நான் எனது காலி இடத்தில் உள்ள தேங்கிய நிறை கத்தம் த்தம் செய்வதற்கு உடனே ஆயத்தமாக உள்ளேன் இதற்கு ஏதும் காலக்கட சுத்தம்த உள்ளதா என்பதை கூறியிருந்தால் அதுவும் மிக்க ஒரு பயனுள்ள தகவலாக இருந்திருக்கும் இது தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்த அல்லது அவர்கள் அதற்கு ஆயுத்தமாகவில்லை என்றால் யாரிடம் புகார் கூறுவது என்பதையும் புகார் எண்னணயும் இதில் தெரிவித்து இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ஐயா நன்றி

MahaganapathyDec 7, 2024 - 01:42:18 PM | Posted IP 162.1*****

நன்று வரவேற்கத்தக்கது.

BabuDec 7, 2024 - 10:55:06 AM | Posted IP 172.7*****

Main road la thanni iruntha yar mela fine podanum ?

RamanathanDec 6, 2024 - 08:04:45 PM | Posted IP 172.7*****

In p& t colony 13th street more than eight empty plots with full bush and snakes with water logging.we will be grateful if cleared

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory