» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பேருந்து - தாசில்தார் ஜீப் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் காயம்!

வெள்ளி 6, டிசம்பர் 2024 5:36:35 PM (IST)

கடையநல்லூர் அருகே தாசில்தார் ஜீப்பும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாசில்தார் டிரைவர் காயம் அடைந்தார். 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி விரைந்து வந்த அரசு பஸ் புன்னையாபுரம் பெட்ரோல் பல்க் அருகே வந்த பொழுது கடையநல்லூரில் இருந்து புளியங்குடியை நோக்கி விரைந்து சென்ற கடையநல்லூர் தாசில்தார் ஜீப் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தி் ஜீப்பை ஒட்டி வந்த டிரைவர் மாரிமுத்துப்பாண்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory