» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!

திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி அரசு பொறியியல் கல்லூரியில் நெல்லையை சேர்ந்த மாணவன், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவன் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கோரி மாணவன் விக்னேஷ் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பர்கிட் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் விக்னேஷ் (21), தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ., மூன்றாம் ஆண்டு படித்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்தில் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாணவன் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக் கணக்கானோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையி்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயிரிழந்த விக்னேஷின் தந்தை செல்வம், மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். திடீர் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory