» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)



மும்மொழி கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் மாநில உரிமைகளான கல்வி, இடஒதுக்கீடு ஆகியவற்றை பிரிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது. இது மாநில உரிமையை பறிப்பதாகவும், கல்விக்கொள்கையில் தலையிடுவதாகவும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதற்கிடையே, பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளை திரும்ப பெறக்கோரியும், மும்மொழி கல்விக்கொள்கையை மத்திய அரசு திணிப்பதை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன் நேற்று போராட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது மாணவர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் தர்ஷிகா, இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 34 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் அழைத்து சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory