» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி சரகத்தில் கங்கைகொண்டான் முதல் செழியநல்லூர் வரை, நெல்லை சந்திப்பு அண்ணாசிலை முதல் பிரசன்னா காலனி வரை, பெருமாள்புரம் முதல் பிரசன்னா காலனி வரை, IRT பாலிடெக்னிக் விலக்கு முதல் அரவிந் கண் மருத்துவமனை வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் தாமஸ்நகர் வரை, நெல்லை டவுண் ஆர்ச் முதல் வல்லவன்கோட்டை கீழுர் வரை, 

நெல்லை டவுண் சந்திபிள்ளையார் கோவில் முதல் செல்வகணபதிநகர் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் ஆல்நகர் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் பாளை பேருந்து நிலையம் வழியாக ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் வண்ணாரப்பேட்டை ரோஸ்மேரி மருத்வமனை வழியாக ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் வரை, பாளைமேட்டுத்திடல் மருத்துவமனை முதல் அரியநாயகபுரம் வரை, பாளைபேருந்து நிலையம் முதல் இட்டேரி வரை, இராமையன்பட்டி விரிவாக்கம் முதல் மானூர் யூனியன் அலுவலகம் வரை 13 வழித்தடங்களிலும், 

அம்பாசமுத்திரம் சரகத்தில் மேலச்செவல் முதல் சேரன்மகாதேவி வரை, அம்பாசமுத்திரம் முதல் முக்கூடல் வரை, வீரவநல்லூர் முதல் கல்லிடைகுறிச்சி பேருந்து நிலையம் வரை, அம்பாசமுத்திரம் முதல் பாப்பாக்குடி வரை, முக்கூடல் முதல் சீதபற்பநல்லூர் வரை 5 வழித்தடங்களிலும், 

வள்ளியூர் சரகத்தில் களக்காடு பேருந்து நிலையம் முதல் கலுங்கடி நாடார் குடியிருப்பு விலக்கு வரை, மாவடி முதல் ஏர்வாடி வரை, திருமலாபுரம் முதல் திருக்குறுங்குடி வரை, விலவன்புதூர் முதல் ஏர்வாடி வரை, வள்ளியூர் ரயில்வே ஸ்டேசன் முதல் நான்குனேரி வரை, வள்ளியூர் முதல் தளபதிசமுத்திரம் வரை 6 வழித்தடங்கள் என மொத்தம் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Online–ல் கட்டணம் ரூ.1500+100=ரூ.1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து, 

விலாச சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் 19.02.2025 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருநெல்வேலி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory