» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீர்ப்பு எதிரொலி.. சசிசலா உடனடி கைது? கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் அதிரடிப்படை குவிப்பு

செவ்வாய் 14, பிப்ரவரி 2017 11:15:18 AM (IST)கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா தங்கியிருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. ஏராளமான போலீசார் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர். தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சொகுசு விடுதியை நோக்கி போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதன் காரணமாக சசிகலா உடனடியாக கைது செய்யப்பட உள்ளதாக அங்கு தகவல் பரவி இருக்கிறது. 

ஆம்புலன்ஸ் வாகனங் களும் கூவத்தூர் விடுதிக்கு சென்றன. இதனால் கூவத் தூர் விடுதியை உள்ள சுற்றி யுள்ள பகுதிகளில் உச்சக் கட்ட பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது. இங்கு  ஆயிரகணக்கான போலீசார் குவிக்கபட்டு உள்ளனர். 200 க்கும் மேற்பட்டஅதிரடிபடை வீரர்களும் சென்றுள்ளனர்.


மக்கள் கருத்து

M.sundaramFeb 15, 2017 - 06:08:37 AM | Posted IP 61.3.*****

Ms Sashikala and her associates (convicted accused) will have heart problem and her loyalties will admit them in Apollo Hospital and avoid incarceration (temporarily) in Bangalore jail.

கேட்ச்Feb 14, 2017 - 11:30:34 AM | Posted IP 82.19*****

அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொல்லும்! தமிழர்களின் புரட்சி உலகறிய மற்றொரு வாய்ப்பு கொடுத்தவர்... இனி இங்கு ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் மண்ணை கவ்வுவார்கள் !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory