» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுற்றுலா என்ற பெயரில் மாணவிகளை ஆபாச படத்துக்கு அழைத்து சென்ற பேராசிரியர் கைது

புதன் 15, பிப்ரவரி 2017 5:04:05 PM (IST)

சுற்றுலா  என்ற பெயரில் மாணவிகளை ஆபாச படத்துக்கு அழைத்து சென்ற அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ரம்யா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இங்கு வாழ்நாள் கல்வியியல் துறையில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தலைவராக பேராசிரியர் அருணாசலம் (42) பணியாற்றி வருகிறார்.

இவர் ரம்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இரட்டை அர்த்தமுள்ள வாசகங்களை அனுப்பியதாகவும், கல்வி சுற்றுலா என்ற பெயரில் கோவா அழைத்து சென்று அங்கு மாணவிகளை ஆபாச படத்துக்கு அழைத்து சென்றதாகவும் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி கார்த்திகேயன் விசாரணை செய்து அருணாசலத்தை நேற்று கைது செய்தார். இவர் சிறிது காலம் சென்னை இசை பல்கலைக்கழக பதிவாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது 


மக்கள் கருத்து

M.sundaramFeb 16, 2017 - 06:00:02 AM | Posted IP 61.3.*****

In case the complaint is proved false and malice , the complainant should be put behind the bar immediately and awarded exemplary punishment.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory