» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இடையே ரகசிய உடன்பாடு..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. !

வியாழன் 16, பிப்ரவரி 2017 12:21:06 PM (IST)

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி எளிதில் வென்று ஆட்சியமைத்துவிடும் சூழல்தான் இப்போது உள்ளது.

இது பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிடும் என கூறப்படுகிறது. எனவே பன்னீர் சற்று இறங்கி வந்து தனது நண்பரான எடப்பாடி பழனிச்சாமியோடு கை கோர்க்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஈடுபட்டுள்ளாராம்.

கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்தபடி ஓ.பி.எஸ்சை தொடர்பு கொண்ட தினகரன், பன்னீர்செல்வத்தை இணைந்து செயல்பட அழைப்புவிடுத்துள்ளார். சசிகலா சிறையில் உள்ள சூழலில் தினகரனுடன் இணைந்து செயல்பட அவரின் நீண்ட கால நண்பரான ஓ.பி.எஸ்சுக்கும் சம்மதம்தானாம். இந்த ஆட்சி இன்னும் 4 வருடங்கள் உள்ள நிலையில் இப்போதே ஏன் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆளாக வேண்டும் என்பதே ஓ.பி.எஸ் உட்பட அனைத்து அதிமுகவினரின் எண்ணமும் ஆகும்.

ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் உடைபட்ட அதிமுகவை திமுக எளிதில் வெல்லும் என்ற அச்சமும் ஓ.பி.எஸ் தரப்புக்கு உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதை இறுதி செய்ய இன்று ஓ.பி.எஸ் வீட்டில் ஆலோசனை நடைபெறுகிறது. சசிகலா முதல்வராக அமர்வதற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டு போகட்டுமே என ஓ.பி.எஸ் இறங்கி வர தயாராகிவிட்டாராம். இதையடுத்து தமிழக அரசியலில் அடுத்து நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Tirunelveli Business Directory