» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு!

வியாழன் 16, பிப்ரவரி 2017 12:55:47 PM (IST)



தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். 

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார். அத்துடன் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory