» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு: 30 அமைச்சர்களும் பதவியேற்பு!

வியாழன் 16, பிப்ரவரி 2017 4:50:24 PM (IST)

தமிழகத்தின் 13-வது முதல்வராக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

கடந்த 14-ந் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கனவே ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி  பயோடேட்டா

வயது : 62 

படிப்பு : பி.எஸ்.சி

ஊர் : எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம்.

குடும்பம் : மனைவி ராதா, மகன்  பி.மிதுன்குமார்.

பதவிகள்: 
  • ஆரம்பம் காலம் முதலே அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். 
  • 1989, 1991, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
  • 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். 
  • பின்னர் 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 
  • 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 
  • 2006 தேர்தலில் போட்டியிட்டுதோல்வியடைந்தார். 
  • 2011 தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory