» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வலியுறுத்தல்

வியாழன் 16, பிப்ரவரி 2017 5:49:57 PM (IST)

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா உட்பட ஊழல் செய்த குற்றவாளிகள் 4 பேர் தண்டிக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இவர்கள் அதிகாரிகள் துணையில்லாமல் ஊழலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் குற்றவாளி என நிரூபித்து, அவர்களது சொத்துக்களையும் பொது தணிக்கைக்கு உட்படுத்தி விசாரிக்க வேண்டும். 

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு மெரீனா கடற்கரையில் உள்ள சமாதியை உடனே அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா புகைப்படத்தை நீக்க வேண்டும். மாணவர்களின் பாட நூல்களில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை மறைக்க வேண்டும். ஜெயலலிதா, சசிகலாவின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். இது, தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. ஊழல் செய்தவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

M.sundaramFeb 17, 2017 - 12:08:30 PM | Posted IP 59.89*****

This should have been done earlier. I do not know why her photo is still in govt office? The govt officials waiting for GO. is not funny? What the rule says? Whenever a person demittd the office, his/her photo to be removed immediately and the photo of the incumbent should be fitted. Why this was not done earlier? The is the state of governance in TN

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory