» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

வியாழன் 16, பிப்ரவரி 2017 8:25:56 PM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்பு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு ஓபிஎஸ் அளித்த பேட்டி தமிழக அரசியலை பரபரபாக்கியது.அதை தொடர்ந்து பல விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறின. இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மெரினா கடற்கரை சென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் நெடுஞ்சாண் கிடையாக தரையில் படுத்து, ஜெயலலிதா உருவப்படத்தை நோக்கி வணங்கினார். 

அவருடன், அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், செம்மலை, கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் இருந்தனர்.அப்போது, பன்னீசெல்வத்தின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்சை வாழ்த்தி கோஷமிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதாவிற்கு பிடிக்காதவர்கள் ஆட்சியமைத்திருப்பதாக கூறினார். 


மக்கள் கருத்து

meenavanFeb 17, 2017 - 03:23:51 PM | Posted IP 103.2*****

yean neyum poi paduthuko avaluku thonaiku poga vendiyathana

பாண்டியன்Feb 16, 2017 - 10:25:12 PM | Posted IP 27.62*****

ஆனாவூனா ஜெயலலிதா சமாதிக்கு போறதுக்கு./ பக்கத்துல பள்ளம் தோண்டி படுத்துகுங்களே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory