» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதவி பறிபோனாலும் கவலை இல்லை.. முதல்வருக்கு எதிராக வாக்களிப்பேன்: நட்ராஜ் எம்.எல்.ஏ பேட்டி

வெள்ளி 17, பிப்ரவரி 2017 11:43:59 AM (IST)

கட்சி தாவல் தடை சட்டத்தால் தனது பதவி பறிபோனாலும் கவலை இல்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத் தார். இதன்படி முதல்- அமைச்சராக பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபால் நாளை (சனிக்கிழமை) சட்ட சபையை கூட்டியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடும் என்று பேரவை செயலாளர் ஜமாலு தீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் பரப்பப்பான அரசியல் சூழ்நிலையில்  மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ்  நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என கூறி இருந்தார். இந்நிலையில் நாளை நடைபெறும் வாக்களிப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என கூறி உள்ளார்.  கட்சி தாவல் தடை சட்டத்தால் தனது பதவி பறிபோனாலும் அது பற்றி கவலை இல்லை என கூறி உள்ளார். இதனால்  எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் இனி 123 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 17, 2017 - 10:55:43 PM | Posted IP 59.96*****

சூப்பர்

meenavanFeb 17, 2017 - 03:22:59 PM | Posted IP 103.2*****

nethanya sariyana aampala

M.sundaramFeb 17, 2017 - 12:02:47 PM | Posted IP 59.89*****

He is the only MLA who acts according to his conscience. Bring laurel to IPS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory