» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதல் மோகத்தில் குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் சிறை: கோவை கோர்ட் தீர்ப்பு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 4:45:39 PM (IST)

கள்ளக்காதல் மோகத்தில் தனது 4வயது பெண் குழந்தையை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு அளித்தது.

கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார்(30). இவர் மனைவி திவ்யா(21). இவர்களுக்கு 4வயதில் பெண் குழந்தை இருந்தது. திவ்யா ராஜாவீதியில் உள்ள தனியார் பேன்சி கடையில் பணிபுரிந்து வந்தார். தினமும் பஸ்சில் செல்லும்போது வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தையை அம்மாவிடம் கொடுத்து விட்டு, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய திவ்யா முடிவெடுத்தார். 

இதற்கு கணவர் அரவிந்த்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு திவ்யா குழந்தையுடன் சென்றார். ‘திருமணமாகி குழந்தை இருக்கும்போது, இதுபோல் செய்வது தவறு. கணவருடன் சேர்ந்து வாழும்படி’ தாய் பார்வதி கண்டித்தார். ஆத்திரமடைந்த திவ்யா, கடந்த 2.6.2016ம் தேதி அன்று கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் 4வயது பெண் குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில், குழந்தையை கொன்றதை தாய் திவ்யா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, திவ்யாவை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. திவ்யா மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திக்கேயன் தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Guru Hospital

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory