» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்த தடை!!

வெள்ளி 17, பிப்ரவரி 2017 4:51:47 PM (IST)

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் உடைந்துள்ளது. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா நேற்று முன்தினம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன்பிறகு சசிகலா தரப்பினர் அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தனர். 

நேற்று மாலை தமிழக முதல்வராக பழனிச்சாமி பதவி ஏற்றார். பதவியேற்ற சிறிது நேரத்தில் சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் மீது கல்வீச்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய பன்னீர்செல்வம், ‘’இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளில் நல்லாட்சி அமைக்க அதிமுக தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் பேரணி நடத்தப்படும்’ என்றார்.

இதன்படி இன்று தமிழகம் முழுவதும் பேரணி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து பேரணியை தொடங்கி வைப்பதாக இருந்தது. பேரணி நடத்தினால் தமிழகம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று பேரணி நடத்த போலீசார் தடைவிதித்துள்ளனர். அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்படி ஓ.பன்னீர்செல்வம் வீடு, மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த காவல் மாவட்டங்களில் துணை கமிஷனர் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். பேரணி நடந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால் அதிவிரைவுப்படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory