» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் : பயணிகள் மகிழ்ச்சி

சனி 15, ஜூலை 2017 1:24:55 PM (IST)

திருச்சியில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களிடையேயான பகல் நேர ரயிலாக இயக்கப்பட்டு வந்த திருச்சி – நெல்லை இன்டா்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்ழக்கப்படும் என்று தென்னக ரயில்வே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி இன்டா்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பதற்கான நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா். மேலும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 7.05 திருச்சியில் இருந்து புறப்படும் ரயில், 9.20 மணிக்கு மதுரைக்கும், 12.30 மணிக்கு நெல்லைக்கும் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மறு மார்க்கமாக காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் ரயில் நெல்லைக்கு 2.35 மணிக்கு வந்து சேரும். பிற்பகல் 2.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.20 மணிக்கு மதுரைக்கும், இரவு 8.15 மணிக்கு திருச்சிக்கும் வந்தடையும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பகல் நேரங்களில் திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாமல் இருந்த நிலையில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

BOOTHALINGAMPILLAIDec 8, 1500 - 11:30:00 PM | Posted IP 157.5*****

THANKS PINNER BY THANU KRISHN BROTHER பிஜேபி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory