» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முறையான பதிவின்றி வீடுகளை வாடகைக்கு விட முடியாது : அமைச்சர் ராதாகிருஷ்ணன்

சனி 15, ஜூலை 2017 8:24:24 PM (IST)

தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைக்காரர்கள் உரிமை முறைப் படுத்தும் சட்ட மசோதாவை வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.

வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையே போடப்படும் ஒப்பந்தத்தின்படி வீட்டு வாடகை நிர்ணயம் செய்யப்படும்.  வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்படும். முறையாக பதிவு செய்யாமல், வீடுகளை வாடகைக்கு விட முடியாது.

புதிய வாடகை நிர்ணய சட்ட மசோதாவால் குடியிருப்பவர்கள், உரிமையாளர்கள் இருவருக்குமே சட்ட பாதுகாப்பு. பிரச்சனைகளை விசாரித்து 30 நாட்களுக்குள் அதிகாரிகள் தீர்வு காண்பர்.  3 மாத வாடகையை மட்டுமே, முன்பணமாக உரிமையாளர்கள் பெறவேண்டும்.  பராமரிப்பு பணிகளை வாடகைதாரர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை யடித்தல் உள்ளிட்ட பெரிய அளவிலான மராமத்துப் பணிகளை வீட்டு உரிமையாளர் செய்து கொடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வாடகை தாரரை குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்துதான் காலி செய்ய சொல்ல வேண்டும்.

அந்த காலக்கெடுவுக்குள் வாடகைதாரர் காலி செய்து கொடுக்க வேண்டும். வீட்டை உள்வாடகைக்கு விடுதல் கூடாது போன்ற சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

RajkumarJul 15, 2017 - 08:38:37 PM | Posted IP 115.1*****

எப்படி கண்காணிப்பார்கள் இதை???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory