» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் காதல் கணவர் சிறைவைப்பு?: 3வது நாளாக மனைவி தர்ணா
ஞாயிறு 16, ஜூலை 2017 9:40:19 PM (IST)
சேலம் அருகே பேஸ்புக் மூலம் பழகி திருமணம் காதல் கணவர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக 3வது நாளாக மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்த காதல் விவகாரம் வெங்கடேஷ்வரன் பெற்றோருக்கு தெரியவந்தது. வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், அவரை ஏற்க மறுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதியன்று, கெங்கவல்லி காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. வெங்கடேஷ்வரனின் பெற்றோர், இனி அவன் எங்களுக்கு மகன் இல்லை என போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் மானாமதுரைக்கு இருவரும் சென்று விட்டனர். திருமணத்தை பதிவு செய்வதற்காக தன்னுடைய சான்றிதழ்களை எடுக்க மானாமதுரையிலிருந்து கடம்பூருக்கு கடந்த 12ம் தேதி வெங்கடேஷ்வரன் வந்தார். மறுநாள், செல்போனில் மனைவியை தொடர்பு கொண்ட அவர், நீயும், உன்னுடைய அப்பாவும் கடம்பூருக்கு புறப்பட்டு வாருங்கள் என கூறியுள்ளார். மஞ்சுளா தன்னுடைய தந்தை அம்மாசியை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் வெங்கடேஷ்வரன் வீட்டுக்கு வந்தார். மஞ்சுளாவை வீட்டுக்குள் நுழைய வெங்கடேஷ்வரனின் பெற்றோர் தடை போட்டனர். அவரை வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, தனது கணவர் வெங்கடேஷ்வரனை கண்ணில் காட்டுமாறும், அவருடன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறேன் என கூறியபோதும் அவர்கள் கேட்கவில்லை. இரண்டு நாட்களாக வீட்டின் முன் அவர் நடுங்கும் குளிரில் அமர்ந்திருந்தார். அப்பகுதி மக்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கின்றனர். தகவல் அறிந்து கெங்கவல்லி போலீசார் மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கணவரை கண் முன் நிறுத்துமாறு மஞ்சுளா பிடிவாதமாக உள்ளார்.
பெற்றோர் அவரை மிரட்டி மறைத்து வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இன்று 3வது நாளாக அவருடைய தர்ணா போராட்டம் தொடர்கிறது. மஞ்சுளா கூறுகையில், ‘கணவரை அவருடைய பெற்றோர் மறைத்து வைத்துள்ளனர். நான் தாழ்த்தப்பட்டவள் என்பதால் என்னை ஓரங்கட்டி அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சிக் கின்றனர். எனது கணவரை மீட்காமல் இங்கிருந்து நகர மாட்டேன். வீட்டில் இருந்து கிளம்புமாறு அதிகாலையில் போலீ சார் வந்து மிரட்டுகின்றனர். எனது கணவரை மீட்டு கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : கோவையை சேர்ந்தவர் கைது
திங்கள் 23, ஏப்ரல் 2018 8:22:45 PM (IST)

நடிகர் எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து மன்னிக்க முடியாத குற்றம் : ரஜினிகாந்த் பேட்டி
திங்கள் 23, ஏப்ரல் 2018 8:10:12 PM (IST)

தூண்டில் வளைவு பணிகளில் அதிகாரிகள் முறைகேடு ? : குமரி எம்பி விஜயகுமார் குற்றச்சாட்டு
திங்கள் 23, ஏப்ரல் 2018 7:26:37 PM (IST)

துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை: பிஹார் வாலிபரை துரத்திப் பிடித்த பொதுமக்கள்!!
திங்கள் 23, ஏப்ரல் 2018 5:55:51 PM (IST)

ரஜினியுடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு
திங்கள் 23, ஏப்ரல் 2018 4:54:03 PM (IST)

தமிழகத்துக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் கூட்டுச்சதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
திங்கள் 23, ஏப்ரல் 2018 4:47:34 PM (IST)
