» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலி ஏமாற்றியதால் விரக்தி... ரயில் முன் பாய்ந்து நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

திங்கள் 17, ஜூலை 2017 12:52:21 PM (IST)

வேறு ஒருவரை காதலித்து, காதலி தன்னை ஏமாற்றிவிட்டதால் மனம் உடைந்த நிதி நிறுவன ஊழியர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

குழித்துறை அருகே ஞாறான்விளை ரயில் தண்டவாளம் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடல் ரெயிலில் அடிபட்டு உருக்குலைந்து காணப்பட்டது.அந்த வழியாகச் சென்றவர்கள் வாலிபர் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பிணமாக கிடந்த வாலிபர் உடல் அருகே அவரது ஆதார் அட்டை கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பினு (25) என்பதும், காதல் தோல்வியில் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு முடித்த இவர் தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பினுவும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். சமீபகாலமாக அந்த பெண், பினுவை புறக்கணித்தார். 

அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். எதற்காக என்னை புறக்கணிக்கிறாய் என அந்த பெண்ணிடம் பினு கேட்டுள்ளார். அதற்கு உன்னை பிடிக்கவில்லை, இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என அந்த பெண் கூறினார். காதலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பினு விசாரித்தபோது அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதனால் பினு மனம் உடைந்து இன்று காலை ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். பினு தற்கொலை செய்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பினுவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 


மக்கள் கருத்து

குமரன்Jul 17, 2017 - 06:48:04 PM | Posted IP 122.1*****

சொத்து போனவனுக்கு எதுக்கு உங்கள் அறிவுரைகள்?

கவுண்டமணிJul 17, 2017 - 04:10:25 PM | Posted IP 182.7*****

டேய் தம்பி அவளுக்கே ஒரு மொல்லமாரி கிடைக்கும்போது உனக்கு ஒரு முடிசறுக்கி கிடைக்கமாட்டாளா? ஏன்டா உயிரை விடனும்.

niasJul 17, 2017 - 03:39:01 PM | Posted IP 106.2*****

அன்புள்ள நண்பனை ஒரு நிமிடம் உன் எதிர் காலம் சிந்தித்தால், நீ நன்றாக இருப்பர் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory