» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது : திருநாவுக்கரசர் பேட்டி

திங்கள் 17, ஜூலை 2017 1:11:29 PM (IST)

நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்.,தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தமிழக அரசுக்கும்,கமலஹாசனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.அரசில் ஊழல்கள் நடந்திருப்பதாக கமல் கூற,கமல் வருமானவரி கட்டினாரா என சோதனை செய்யவா என அமைச்சர் வேலுமணியும்,கமல் பணத்திற்காக எதையும் செய்வார் என அமைச்சர் சிவி சண்முகமும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் பாேது,நடிகர் கமல் ஹாசனை தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர் மீதும் வழக்கு தொடரப் படும் எனக் கூறுவதையும் தமிழக அமைச்சர்கள்  கைவிட வேண்டும் என்றார். மேலும்  நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory