» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 17, ஜூலை 2017 4:54:58 PM (IST)

தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயநீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. 

சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதியோடு நிறைவுற்றது. அதனையடுத்து, அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பணி நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு. இது பல்வேறு தரப்பிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக, டிஜிபி பதவி உயர்வை எதிர்த்து , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கண்ணன் கூறுகையில், "வருமானவரித்துறையினர் சோதனையின்போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மாநில அமைச்சர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்தது. 

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச்செயலர் மற்றும் உள்துறைச் செயலருக்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதை கிடப்பில் போட்டு விட்டனர். அதில் டிஜிபி ராஜேந்திரன் தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன.எனவே ராஜேந்திரன் பணியில் தொடர்ந்தால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை பாதிக்கும்." என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை இன்று, தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்துள்ளதால் தமிழக காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory