» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு -செயற்குழு கூட்டம் தொடங்கியது

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 11:23:18 AM (IST)

பரபரப்பான அரசியல் சூழலில்m பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. டிடிவி ஆதரவாளரும், அதிமுக தில்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களில் 95% பேர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் அறிவித்துள்ள கூட்டம் ஒருபுறம், அதற்கு செல்லக் கூடாது என்ற தினகரனின் தடை மறுபுறம் என இந்தக் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டத்தில் பிரச்னைகள் ஏதும் வந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்தில் யாரும் தடை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக கோயம்பேடு பகுதியில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் வரை சாலை முழுவதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

பாலாSep 12, 2017 - 04:25:46 PM | Posted IP 61.14*****

50 கிலோ மிச்சர் பார்சல்...

சேகர்Sep 12, 2017 - 11:38:37 AM | Posted IP 125.1*****

420 தினகரன் ஆட்டம் close

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory