» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் இறங்கிவிட்டேன் : டிடிவி தினகரன் பேட்டி

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 1:38:56 PM (IST)

ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் இறங்கிவிட்டேன் என அதிமுக அம்மா அணி துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அணியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டம் இன்று நடை பெற்றது. இந் நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது,ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் இறங்கி விட்டேன்.இருக்கிற வரை கட்சிப் பதவி மற்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என தற்போதுள்ளவர்கள் நினைக் கிறார்கள். 

முதலமைச்சராக பழனிசாமியை தேர்வு செய்த போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆட்சி தொடர்ந்தால் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதாலேயே முதலமைச்சரை மாற்ற முயற்சி செய்கிறோம். 

கட்சி, ஆட்சியை காப்பாற்ற எனது ஆதரவு எம்எல்ஏக்கள் எந்த முடிவும் எடுக்க தயாராக உள்ளனர் என்ற தினகரன் இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது பொதுக்குழு அல்ல, கூட்டம் என்றார். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்ககூடாது என்றால், அவர் வகித்த முதலமைச்சர் பதவியில் பழனிசாமி இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தேர்தலை சந்திக்க பயம் என்பதால் நாங்கள் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்ற தினகரன் தேர்தல் களத்தில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 12, 2017 - 05:47:36 PM | Posted IP 117.2*****

தயவு செய்து , முதல்ல மோடியை வீட்டுக்கு அனுப்பி விடுங்க , புண்ணியமா போகும்

சுடலைSep 12, 2017 - 03:27:30 PM | Posted IP 125.1*****

எனக்கு நல்ல அடிமை கிடைத்து விட்டான்

உண்மைSep 12, 2017 - 01:45:34 PM | Posted IP 122.1*****

அவர்கள் உன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதுதான் உண்மை! சுடலை கூஜா தூக்கு!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory