» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்னபாடு படுத்தியிருப்பார்கள்? வளர்மதி ஆவேசம்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 4:52:15 PM (IST)

ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்னபாடு படுத்தியிருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

சென்னை, வானகரம் பகுதியிலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.வளர்மதி வரவேற்புரையாற்றி பேசுகையில், ஆவேச கருத்துக்களை எடுத்துரைத்தார். ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? என்று சீறிய வளர்மதி ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுவோர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள். உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுகவை காப்பாற்றி, ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெ. ஆட்சியை கவிழ்க்க நினைப்போருக்கு தக்கபாடம் புகட்டுவோம். சசிகலா குடும்பம் அதிமுகவுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று பேசினார். ஆட்சியை கலைக்கவும் தயார் என தினகரன் நேற்று பேட்டியளித்த நிலையில் வளர்மதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் போலவே வளர்மதியும், சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு பெங்களூர் சிறை வரை சென்று போலீசாரால் விரட்டியடிக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி அணியில் இணைந்து கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. 


மக்கள் கருத்து

ஒருவன்Sep 12, 2017 - 05:46:14 PM | Posted IP 117.2*****

காசுக்காக மட்டும் எதையும் செய்யும் ஒரு கூட்டம்

பாலாSep 12, 2017 - 05:18:35 PM | Posted IP 61.14*****

நீ ஆயுத தேர்தல்ல நின்னு பாரு உன்னை என்ன பாடு படுத்துறோம்னு..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory