» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனிதாவை எல்லோரும் தங்கையாகப் பார்க்கிறார்கள்; தலித்தாக அல்ல.. ரஞ்சித்துக்கு சீமான் பதில்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 5:28:56 PM (IST)

அனிதாவை நீங்கள் தலித் ஆகப் பார்க்கிறீர்கள். இது உங்கள் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது என்று இயக்குநர் ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது என்று கடந்த 7-ம் தேதி அன்று அரியலூர் மாணவி அனிதாவுக்கான உரிமையேந்தல் நிகழ்ச்சியில் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாறுபட்ட கருத்துகளால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஞ்சித் பேச்சுக்கு சீமான் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துப் பேசினார். இது குறித்து சீமான் பேசுகையில், ரஞ்சித் கோபம் நியாயமானது. அவர் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. ரஞ்சித் சொல்கிற வேதனையும், காயங்களும் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காக வெட்கித் தலைகுனிகிறோம். புரையோடிப்போன சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார். இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள்தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம். இந்த உணர்வைதான் ஊட்டி வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று சீமான் பேசினார்.


மக்கள் கருத்து

pandiyanSep 13, 2017 - 01:50:38 PM | Posted IP 117.2*****

நான் தேவர் இனக்குழுவை சேர்ந்தவன் அனிதா எங்கள் தங்கையே. சீமான் சொல்வது சரியே.

SARAVANANSep 13, 2017 - 11:28:06 AM | Posted IP 160.2*****

தலித் LEADER

THALITHSep 13, 2017 - 11:27:18 AM | Posted IP 160.2*****

தலித் LEADER

தமிழன்Sep 13, 2017 - 10:00:59 AM | Posted IP 61.12*****

சீமான் தமிழன் ஒற்றுமை .....

chithuSep 12, 2017 - 06:49:33 PM | Posted IP 89.21*****

யாருப்பா இந்த ரஞ்சித்து.?

chithuSep 12, 2017 - 06:49:32 PM | Posted IP 89.21*****

யாருப்பா இந்த ரஞ்சித்து.?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory