» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வருவாய்த்துறையின் பெயர் மாற்றம் அரசாணை வெளிட்டது தமிழக அரசு

புதன் 13, செப்டம்பர் 2017 8:22:21 PM (IST)

தமிழக வருவாய்த்துறையின் பெயர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி தாக்கியபோது, தமிழக அரசு சார்பில் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. வருவாய்த்துறை, இத்திட்டங்களை கண்காணித்து செயல்படுத்தியது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், வருவாய் த்துறை என்பது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என அழைக்கப்படுகிறது. 

மாநிலத்தில் மிக முக்கியமான பணிகளை ஆற்றி வரும் வருவாய்த்துறையின் பெயரை தமிழகத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.அதனடிப்படையில் தமிழக வருவாய்த்துறையின் பெயர் வருவாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அர சாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பொதுமக்களுக்கு தேவையான முக்கிய சான்றிதழ்களை வருவாய்துறை தான் வழங்கி வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Tirunelveli Business Directory