» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை: மத்திய பெட்ரோலியத்துறை தகவல்

வியாழன் 14, செப்டம்பர் 2017 10:41:55 AM (IST)

தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 16–ந்தேதி முதல் அன்றாட அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு இதுவரை  பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு 7 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரித்து உள்ளது. எனவே இதனை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் சார்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியார்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை குறையும்போது அதன் பலன் உடனடியாக நுகர்வோரை சென்றடையும் விதமாகவும், விலை உயரும்போது அதன் தாக்கம் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் அன்றாட விலை நிர்ணய முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்தன. மத்திய அரசை பொறுத்தவரை எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவே விரும்புகிறது. எனவே இதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிடாது. இந்த சீர்திருத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 14, 2017 - 05:32:15 PM | Posted IP 59.96*****

உண்மை அவர்களுக்கு ஒங்க பீ சப்பி (பிஜேபி) அரசு வந்ததும் எந்த பயனும் இல்லை , குறைக்கவும் தெரியவில்லை , பெட்ரோல் எல்லாம் வெளிநாட்டில் தான் குறைந்த விலைக்கு வாங்கி அம்பானிக்கு கூட்டி விற்பான். , அம்பானியோ 2 மடங்கு கூட்டி விற்பான் , இது எல்லாம் மேக் இந்த இந்தியா சொல்லி வாங்கி விற்கும் , கூட்டி விற்கும் டுபாக்கூர் கூட்டம் ..

உண்மைSep 14, 2017 - 04:52:45 PM | Posted IP 122.1*****

பெட்ரோல் விலை குறையும் போது எந்த அரசு?

தமிழன்Sep 14, 2017 - 03:51:34 PM | Posted IP 122.1*****

இது மோடி அரசு இல்ல அம்பானி அரசு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory